’’குருதி ஆட்டம்’’ முடிச்சாசு ட்வீட் போட்ட ராதிகா..!
சென்னை; திரைப்படம் சீரியல் என பிஸியாக வலம் வரும் நடிகை ராதிகா சரத்குமார். கொரோனா ஊரடங்கால் திரைத்துறை முற்றிலும் முடங்கிப் போனது. பல நடிகர்,நடிகைகள் வீட்டில் முடக்கப் பட்டு பாதியில் படங்கள், சீரியல்கள் நிறுத்தப்பட்டது . தமிழக அரசு நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வந்தன. அதாவது சின்ன திரை படப்பிடிப்பு, சின்ன சின்ன பட வேலைகளை 50 பேர் மட்டும் கலந்து படவேலைகளை ஆரம்பிக்கலாம் என அறிவித்தது.
இதைத் தொடர்ந்து சினிமா துறையினர் தனது பணிகளை மெல்ல மெல்ல ஆரம்பிக்க தொடங்கிவிட்டனர். எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் படம் ’’குருதி ஆட்டம்’’. இப்படத்தின் நாயகன் அதர்வா அவருக்கு ஜோடியாக பிரியா பவாணி ஷங்கர் நடிக்கிறார். இந்தப்படம் ஆக்சன் திரில்லர் கதை.
இசை; யுவன் சங்கர் ராஜா
இந்தப் படம் ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ சார்பில் கார்த்திகேயன் மற்றும் ராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் முருகானந்தம் இணைந்து தயாரிக்கிறார்கள். ’குருதி ஆட்டம்’ பிரபல நடிகர்கள் ராதிகா சரத்குமார், ராதாரவி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான டப்பிங் வேலைகள் ஊரடங்கு தளர்வுக்கு பின் நடந்து வந்தது. குருதி ஆட்டம் டப்பிங் வெற்றி கரமாக முடிந்ததை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ’’குருதி ஆட்டம்’’ ரொம்ப சுவாரஸ்யமான படம் அதை தான் எதிர்பார்ப்பதாக பதிவிட்டுள்ளார்.