AR ரஹ்மான் வெளியிட்ட சுமோ’’ பட ட்ரைலர் !

சுமோ படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

’வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் ’சுமோ’. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருக்கிறார்.

இசை – நிவாஸ் கே பிரசன்னா’’

 இந்தோ-ஜப்பானிஸ் படமான ‘சுமோ’ சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும். பல காட்சிகள் படமாக்கப்பட்டன. ஜப்பானில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் , யோகி பாபு நடித்திருக்கிறார்கள் .குழந்தை முதல் பெரியவர்கள்  ரசிக்கக்கூடிய திரைப்படம் இது. நடிகர் சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார்.

சுமோ படத்தின் ட்ரைலர்  நடிகர் சிவாவின் பிறந்த நாளான நேற்று வெளியாகி உள்ளது. ட்ரைலரை இசை புயல் AR ரஹ்மான் வெளியிட்டார் .

Related Posts