ஸ்டன்ட் மாஸ்டர் பஞ்ச் பரத்’ அறிமுகமாகும் செய்தித்தாள்’!

டேக்கன் என்டர்டெய்ன்மென்ட்’ சார்பில் பிரியங்கா.P தயாரிப்பில் பஞ்ச் பரத்  இயக்கத்தில் உருவாகும் படம் ‘செய்தித்தாள்’.
 
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்நான் ஸ்டண்ட் நடிகராக 3000 படங்களுக்கும்  , ஸ்டண்ட் மாஸ்டராக 59 படங்களுக்கும் பணியாற்றியுள்ளேன். இயக்குனராக இந்திர சேனா மற்றும் நீ தானா அவன் என இரு படங்களை இயக்கியுள்ளேன். மூன்றாவது படைப்பாக இந்த ‘செய்தித்தாள்’.

இப்படத்தில் சதன், யோகி, நசிர், துரை ஆகிய நான்கு  கதாநாயகர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ ஸ்ரீ , பாலா அம்பிகா மற்றும் இந்த படத்தின் வில்லனாக  பஞ்ச் பரத் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு வேல், இசை தஷி, படத்தொகுப்பு லக்ஷ்மணன், சண்டைப்பயிற்சி பஞ்ச் பரத், நடனம் அக்ஷயா ஆனந்த் மற்றும் ஈஸ்வர பாபு.

செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் இந்த செய்தி தாள். செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகை துறையை இந்தப்படம் நிச்சியம் கௌரவ படுத்தும்.

இப்படத்தின் படப்பிடிப்பு மேட்டூர், சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெற்று முடிந்துள்ளது.சென்சாருக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்றார்.

Related Posts