குளத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் தண்ணீரில் மூழ்கிய பரிதாபம்!
நாகைமாவட்டம் வெளிப்பாளையம் என்ற ஊரில் சிவன் கோயிவிலுக்குச் சொந்தமான குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 8 வீடுகள் சுவர் இடிந்து விழுந்து தண்ணீரில் முழ்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவன்கோயிலுக்குச் சொந்தமான குளத்தைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட வீடுகள் அந்த ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை எச்சரிக்கை விடுத்தும் யாரும் கேட்டவில்லை. இந்த சூழ்லையில், சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வந்த தண்ணீரின் அளவு அதிகமானதால் சிவன் கோயில் குளம் படிக்கட்டுகளைத் தாண்டியும் நீர் நிரம்பி உள்ளது.
இதன் காரணமாக , வடக்கரை பகுதியில் கட்டப்பட்டிருந்த 8 வீடுகள் இன்று காலை 6 மணிக்கு அடுத்துஅடுத்து என 8 வீடுகளும் சுவர் சரிந்து குளத்தில் விழுந்தன.
வீட்டின் அதிர்வை உணர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர். அதைத்தொடர்ந்து, வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பாத்திரங்கள் என அனைத்தும் பொருட்களும் குளத்துக்குள் மூழ்கின. தாங்களது வீடும் பொருட்களும் அவர்களது கண்முன்னே நீரில் மூழ்கியது. அவர்களது உடமைகளை மீட்க முடியாமல் பரிதவித்தனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி யில் வசிபவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டகூடாது என்பதனை இவ்வாறு அசம்பாவிதம் உணர்த்தினாலும் இது தொடர்கதையாகவே உள்ளது.