மகளிர் தினத்தை முன்னிட்டு ஈஷாவில் சிறப்பு மருத்துவ முகாம்!
கோவை; சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஈஷா ஆரோக்கிய அலைப்பு சார்பில் மார்பகம் மற்றும் கர்ப்பபை தொடர்பான நோய்களை கண்டறிவதற்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோவையில் இன்று (மார்ச் 8) சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து கோவை முட்டத்துவயல் பகுதியில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 1 வரை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 20 வயது முதல் 75 வயது வரை உள்ள ஏராளமான பெண்கள் பங்கேற்று பயன்பெற்றனர். அவர்களுக்கு ஆரம்பக் கட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் இதுபோன்ற விதமான இலவச மருத்துவ முகாம்கள் மாதந்தோறும் கோவையில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.