”ஜிப்ஸி’’ திரைப்படத்தை பாராட்டும் கமல்ஹாசன்..!
நடிகர் மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஜிப்ஸி படத்தை பார்த்து விட்டு படக்குழுவினரை அழைத்து பாரட்டியுள்ளார். மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் தான் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”. என நடிகர். கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
ஜிப்ஸி திரைப்படத்தை பார்த்த நடிகர் கமலஹாசன், இயக்குநர் ராஜுமுருகன்,தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட ஜிப்ஸி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருப்பது படக்குழுவினருக்கு உச்சாகத்தை ஏற்படுத்திருக்கிறது.
கமலஹாசன் அவர்களுடன் இயக்குநர் கொளதம் வாசுதேவ் மேனன் அவர்களும் திரைப்படத்தை பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.