போலீஸ் பிரியர்களுக்கு விருந்தாகும் ”அசுரவம்சம்”

2018 ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ” நட்சத்திரம்  ” படத்தின் தமிழாக்கமே இந்த          
 ” அசுரவம்சம் ”

லட்சுமி வாசந்தி புரொடக்ஷன் சார்பாக A.வெங்கட்ராவ் மற்றும் S பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக  சேலம் B.சேகர் ஆகிய இருவரும் இணைந்து ’’அசுரவம்சம்’’ தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் கதாநாயகனாக  சந்தீப் கிசன் நடித்துள்ளார். நாயகியாக ரெஜினா கசான்ட்ரா.

 மற்ற  நடிகர்கள்;

பிரகாஷ்ராஜ்,

ஸ்ரேயா சாய் தருண் தேஜ், பிரகயா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு  – ஸ்ரீகாந்த் நரோஜ்
இசை – பிம்ஸ் சிசிரோலேயோ
பாடல்கள்  –  முருகானந்தம், வலங்கைமான் நூர்தீன், ஆவடி சே.வரலட்சுமி, சங்கர் நீதிமாணிக்கம், பழமொழி பாலன், எழிலன்பன்
எடிட்டிங்  – சிவா Y பிரசாத்
நடனம்  – ஸ்ரீதர்
இயக்கம் – கிருஷ்ண வம்சி
வசனம் – A.R.K.ராஜராஜா

போலீஸ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆகுது என ஏங்கும் நபர்களுக்கு மிக அழுத்தமான கதையாக  விருந்தாகவும் அமைந்திருக்கிறது ‘’அசுரவம்சம்’’

கான்ஸ்டபிள் மகனாக இருக்கும் நாயகன்  சந்தீப் கிசனுக்கு  போலீஸ் ஆக வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியத்தை கமிஷ்னரின் மகன் ஒரு பிரச்சனையில் சிதைத்து விடுகிறான்.  கனவு கலைந்தாலும் அதற்கும் வருத்தப்படாத நாயகன் காவல் அதிகாரியின் கெட்டப்போடு சமூகப் பிரச்சனைகளை மாஸாக கையாள்கிறார்.

ஒரு கட்டத்தில் சமூகத்தில் நடக்கும் மிகப் பெரிய  பிரச்சனைக்கு தலைவனாக  கமிஷ்னர் மகனே இருப்பதைக் கண்டு கொதித்து எழுகிறான்.  அந்த தலைவனை எப்படி எதிர் கொள்கிறான் என்பதும், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்ள் என கதை சூடுபிடிக்கிறது.

 இந்தப்படத்தில் பாடல்கள் கவிஞர் சே வரலெட்சுமி  என சில கவிஞர்கள் கைகோர்த்திருக்கிறார்கள்.

Related Posts