பாம்புகள் நல்லவை!: நடிகை சொல்லும் விழிப்புணர்வு தகவல்
சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரவீணா.
மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடிக்கும் பிரவீணா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகராசி என்ற தொடரிலும் நடிக்கிறார்.
நடிகை பிரவீணா தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். சில நாட்களுக்கு முன் அவரது வீட்டிற்குள் குட்டி பாம்பு நுழைந்துவிட்டது. அதை கைகளில் ஏந்தி, போஸ் கொடுத்துள்ள பிரவீணா, அந்த படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “பாம்புகளை நாம் சீண்டாமல் இருந்தால், அவை நம்மை கடிக்காது. 99 சதவிகித பாம்புகள் விசம் இல்லாதவை. இயற்கைச் சூழல் சரியான வழியில் தொடர பாம்புகள் அவசியம். பாம்புகள் நம் நண்பன் என்பதை உணரவேண்டும்,” என்றார்.
இவ்வாறு கூறியுள்ளார் ரவீணா.