சோனாவின் வாழ்க்கைத் தொடர்: வெங்கட் பிரபு, எஸ்பி சரண் விவகாரங்களும் இருக்குமா?

சோனாவின் வாழ்க்கைத் தொடர்: வெங்கட் பிரபு, எஸ்பி சரண் விவகாரங்களும் இருக்குமா?

கடந்த இருபது  வருடங்களாக, தமிழ்,  தெலுங்கு, மலையாள மொழிகளிலும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனா. ஒரு கட்டத்தில் கவர்ச்சியை விட்டுவிட்டு குணச்சித்திர பாத்திரங்களுக்கு மாறினார்.

பிறகு, நடிப்பதைவிட்டு படம் ஒன்றை தயாரித்தார். தற்போது அவர், தனது வாழ்க்கையை ஸ்மோக் என்ற வெப் தொடராக இயக்கி, தயாரித்து உள்ளார்.

மூன்று காலகட்ட கெட் அப்கள் உள்ளதால் மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.

‘மத்தகம்’ என்கிற வெப்சீரிஸில் கவுதம் வாசுதேவ் மேனனின் மகளாக நடித்திருந்த நடிகை ஜனனி விஜயகுமார், சோனாவின் இந்த 14 வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இது குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில், “இளமை பூக்கும் பதினான்காம் வயதில் நான் ஒரு அழகான வாழ்க்கையை எதிர்நோக்கி கொண்டிருந்தேன், ஆனால் அந்த கரம் என்னை பிடித்தது.. என்னை தள்ளியது.. நான் பேசுவதற்கு யாருமே கிடைக்கவில்லை. நான் ஏதோ உயிர் வாழ்கிறேன்” என்கிற வாசகங்களும் இடம் பெற்றது.

இது தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

மேலும், சோனாவின் கடந்த காலங்களில் நடந்த சர்ச்சை சம்பவங்கள் இந்தத் தொடரில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.இயக்குநர் வெங்கட்பிரபு ரூ.1.5 கோடி ரூபாயை தன்னிடம் மோசடி செய்துவிட்டதாக, முன்பு சோனா கூறினார். இது குறித்து நடிகர் சங்கத்திலும் புகாரும் அளித்தார்.

நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்துக்கு தான் சென்றபோது தன்னிடம், (மறைந்த) பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்றதாக புகார் செய்தார்.

அத்துடன் எஸ்.பி.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசிலும் புகார் செய்தார்.

பிறகு, ‘எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் மூலம் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன்’ என்று சோனா கூறினார்.மேலும், தனக்கு குடிப் பழக்கம் இருந்ததாகவும் வெளிப்படையாக பேசியவர் சோனா. அதோடு, நாற்பது வயதுக்கு மேல் அரசியலுக்கு வருவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.இதுபோன்ற நிஜ நிகழ்வுகளும் இத்தொடரில் இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Posts