நடிகர் திலகத்துக்கு ‘இயல்பு நடிகர்’ எம்.எஸ்.பாஸ்கர் புகழஞ்சலி!

நடிகர் திலகத்துக்கு ‘இயல்பு நடிகர்’ எம்.எஸ்.பாஸ்கர் புகழஞ்சலி!

தன்னிகரற்ற, தனித்துவமான நடிப்பால் தமிழ்த்திரையுலகில் ஆளுமையாக பரவி சிகரம் தொட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். காலத்தால் அழியா காவியப் படைப்புகளை கலையுலகிற்கு விட்டுச் சென்ற சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்த தினம் இன்று.

நடிகர் திலகத்தை தந்தையாக போற்றும் – இயல்பான நடிப்பை அளிக்கும் –  நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள்…. இன்று நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார்.

மேலும் அவர், ” மண்ணில் இரு்ந்து மறைந்தா மக்க மனதில என்றென்றும் மறையாத எங்கள் அப்பா நடிகர் திலகம் அவர்களின்  96 வது பிறந்தநாள் இன்று.  அப்பா,  உங்கள் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும்.

அஇப்படி ஓர் நடிகர், மக்கள் திலகம். அவர் உடல் மறைந்தாலும்,  மனதில் மறையாது நீங்கா இடம் பெற்றவர்.  அவருடன் பழகியது, நான்  எத்தனையோ ஜென்மங்கள் செய்த புண்ணியம்.

நான் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். எனக்கு மூன்று அப்பாக்கள். ஒருவர், என்னைப் பெற்ற  முத்துப்பே்டை சோமு அய்யா அவர்கள்.. அடுத்து கலைஞர் அப்பா… அடுத்து.. நடிகர் திலகம் சிவாஜி அப்பா!

மண்ணில் இருந்து அவர்கள் மண்ணில் இருந்து சரீீரம் மறைந்தாலும் அவர்கள் நினைவு மறையாது” என்று நெகிழ்ந்து சொன்னார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

சிறந்த நடிகருக்கு, சிறந்த நடிகரின் வணக்கங்கள்… பொருத்தம்தானே!

Related Posts