சில நொடிகளில் – சினிமா விமர்சனம்

சில நொடிகளில் – சினிமா விமர்சனம்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ’சில நொடிகளில்’ கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர், மர்டர் மிஸ்ட்ரி என இந்த படம் வெளியாகியிருக்கிறது.

லண்டனில் மனைவியுடன் வசிக்கும் சொந்தமாக மருத்துவனை வைத்துள்ளார்.  பிளாஸ்டிக் சர்ஜரியில் எக்ஸ்பர்ட்டான கதையின் நாயகன். தனது  காதலியின் திடீர் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறான். இதை யாருக்கும் தெரியாதபடி அவளது சடலத்தை மறைத்து விடுகிறான். அவனது இந்த செயல் ஒரு பெண் கண்டுபிடித்து பணம் கேட்டு அவனை மிரட்டுகிறாள். இந்த விவகாரம் அவனுடைய மனைவிக்கும் தெரிகிறது.

அவன் செய்த கொலை அந்த பெண்ணுக்கு எப்படி தெரிந்தது?அடுத்து  அவனது மனைவி என்ன செய்தாள்? இந்த சிக்கல்களிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான் என்பது மீதி கதை.

ரிச்சர்ட் ரிஷிக்கு கிட்டத்தட்ட படம் முழுக்க மன இறுக்கம், பயம், பதட்டம், குற்றவுணர்ச்சி, இயலாமை என உற்சாகத்துக்கு வழிவிடாத உணர்ச்சிகளை வெளிப்படுத்திருக்கிறார். அதை மிகமிக சரியாய் செய்திருப்பவர், கிடைத்த கேப்பில் காதலி யாஷிகாவோடு நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் ஆண் பொறாமைப்படும்படி வாழ்ந்திருக்கிறார்.

யாஷிகா ஆனந்த் சொல்லவே வேண்டாம் அருமையான உடலின் வளைவு நெளிவுகளை பரிமாறுவதில் காட்டியிருக்கும் தாராளம் இளைஞர்களின் ஹார்மோனை சூடேற்றுகிறது.

ரிச்சர்ட்டின் மனைவியாக ’புன்னகைப் பூ’ கீதா. கணவர் தன்னுடன் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்ற உணர்வு தனது பாத்திரத்துக்கு முடிந்தவரை உயிரூட்டியிருக்கிறார். கிளைமாக்ஸில் வெளிப்படும் அவரது வேறொரு பரிமாணமும் அசத்துகிறது! ஹீரோவை பணம் கேட்டு நாயகனை மிரட்டும் அந்த இளம்பெண்ணின் வில்லத்தனம் கதையோட்டத்துக்கு பலம் சேர்க்கிறது.

லண்டனிலுள்ள உள்ள மொத்த அழகையும் தனது  கேமராவில் அடைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன.

ரீமேக்கில் பாரதியாரின் ஆசை முகம் ‘மறந்துபோச்சே’ பாடல் ரசிக்க வைக்கிறது.

ஹாலிவுட் பட பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கான பின்னணி இசையை, கதையோடு பொருத்தமாக தந்துள்ளார் பாலிவுட் இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி.மொத்தத்தில் ரசிக்கும் படி உள்ளது சில நொடிகளில் திரைப்படம்.