ஸ்ருஷ்டி & சுப்ரா அதிரடி நடிப்பில் ‘ஆகன்யா’!

ஸ்ருஷ்டி & சுப்ரா அதிரடி நடிப்பில் ‘ஆகன்யா’!

யாரிப்பாளர் திருமலை சிவம் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குனர் ஜவஹர் பரமசிவம் செதுக்கியுள்ள இந்த திரைப்படம், திரில்லிங் மற்றும் ஆக்சன் சேர்ந்த ஒரு விறுவிறுப்பான படைப்பு.

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிரம்மாண்ட வணிக வளாகங்களில் மிக அதிக பொருட்செலவில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

திரையில் ஆக்சன் நாயகியாக களமிறங்கி சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் சுப்ரா அய்யப்பா. மற்றொரு நாயகியாக வரும் ஸ்ருஷ்டி டாங்கே, தனது சாதுர்யமான நடிப்பால் ரசிகர்களை கவர காத்திருக்கிறார்.

ஆட்டம்போட வைக்கும் துள்ளலான குத்து பாடலில் ஸ்ருஷ்டி டாங்கே வலம் வர, மனதை மயக்கும் காதல் பாடலை கவிஞர் பா விஜய் எழுதியுள்ளார்.

விரைவில் வெள்ளித்திரையை அதிர வைக்க வருகிறது இந்த ஆக்சன் வேட்டை!

தயாரிப்பு திருமலை சிவம் இயக்கம் ஜவஹர் பரமசிவம் ஒளிப்பதிவு கதிரவன் இசை சுபாஷ் சந்திரன் படத்தொகுப்பு விக்னேஷ் குமார்

Related Posts