ராவடி அதிரடி ஆரம்பம்: இணையத்தை தெறிக்கவிடும் ‘அட்ரா பரமா..’ பாடல்!

ராவடி அதிரடி ஆரம்பம்: இணையத்தை தெறிக்கவிடும் ‘அட்ரா பரமா..’ பாடல்!

மலையாள சினிமாவின் கலக்கல் நாயகன் பேசில் ஜோசப்பும் சிறை படத்தின் மூலம் பட்டையை கிளப்பிய எல் கே அக்ஷய் குமாரும் இணைந்து அதகளம் செய்திருக்கும் ராவடி திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது

விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜான் விஜய் ஜாபர் சாதிக் ஷாரிக் ஹாசன் உட்பட பல நட்சத்திர பட்டாளமே இணைந்து மிரட்டியிருக்கிறார்கள் லியோன் பிரிட்டோவின் கேமரா கண்களும் ஜென் மார்ட்டினின் அதிரடி இசையும் பரத் விக்ரமனின் படத்தொகுப்பும் இந்த படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்துள்ளன

படித்தது போதும் அட்ரா பரமா என்று சொல்லும் அளவுக்கு பொடி பொடியா அடிச்சது பொடியன் இல்ல பாத்துக்க பாத்துக்க என தொடங்கும் இந்த மரண மாஸ் குத்து பாடலை உதய் எழுத பிரபல பாடகர் அறிவு தன் காந்த குரலில் பாடி அசத்தியிருக்கிறார் இளம் நெஞ்சங்களை துள்ள வைக்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் ரிப்பீட் மோடில் ஒலிக்கிறது

ஏற்கனவே படிடா பரமா என்ற வசனம் இணையத்தில் ட்ரெண்டான நிலையில் தற்போது அட்ரா பரமா பாடலும் செம ஹிட்டடித்துள்ளது வருகிற டிசம்பர் இருபத்து நான்காம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைக்க இந்த ராவடி படம் முழுமையாக தயாராகிவிட்டது