DC 3 ‘ரத்தத்த தா…’!: நரக உலகை காட்டும், சாம் சி.எஸ்-ன் மிரட்டல் பாடல்!

DC 3 ‘ரத்தத்த தா…’!: நரக உலகை காட்டும், சாம் சி.எஸ்-ன் மிரட்டல் பாடல்!

ஜய் ஞானமுத்து – அருள்நிதி கூட்டணியில் உருவாகும் “டிமான்டி காலனி” மூன்றாம் பாகத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி, ரசிகர்களைத் திகிலில் ஆழ்த்தி வருகிறது!

பாட்டின் ஸ்பெஷல்ஸ்:

  • இசையும் குரலும்: மோகன் ராஜன் எழுதிய இந்த இருண்ட பாடலுக்கு, சாம் சி.எஸ் இசையமைத்துத் தன் சொந்தக் குரலிலேயே பாடி மிரட்டியுள்ளார்.

  • நரக உலகம்: ரத்தச் சிவப்பு நிறப் பின்னணியில், வில்லனின் நரக உலகைக் கண்முன் கொண்டுவரும் கலை வடிவம் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

  • சவுண்ட் டிசைன்: இரண்டாம் பாகத்தின் பின்னணி இசையில் அசத்திய சாம் சி.எஸ், இந்த மூன்றாம் பாகத்திலும் மிரட்டலான சவுண்ட் டிசைன் மூலம் பயத்தின் தீவிரத்தைக் கூட்டியுள்ளார்.

ஹாரர்-த்ரில்லர் விரும்பிகளுக்குச் சிறந்த விருந்தாக அமைந்திருக்கும் இந்தப் பாடல், இணையத்தில் செம வைரலாகி வருகிறது!

https://youtu.be/Jd2N7QsDsrY