அதிர்ச்சி அளிக்கும் போலீஸார் நடனம்!

உலக  முழுவதும் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் பொது நிகழ்ச்சிகள் தடைவிதிக்கப்பட்டு அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகள், சமூக வலைத்தளங்கள், தனிநபர்  பிரசாரம் என  அதிகரித்து வருகிறது.

மேலும்  கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவாத வகையில் என்ன செய்ய வேண்டும்.  என்பதை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரமான பழக்க வழக்கங்களை  நடனத்தின் வாயிலாகவும் போலீசார் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விழிப்புணர்வு வீடியோ ஒரு பக்கம் சரி என்று வைத்துக் கொண்டாலும்’ இதே மாதிரியான கை கழுவும் முறையை சினிமா பிரபலங்கள், விளம்பரங்கள் வாயிலாக ஏற்கனவே அரசு, தொண்டு நிறுவனங்களும் வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, கொரோனோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக போலீஸார் ஆடிப்பாடி வீடியோக்களை வெளியிடுவது தொடர்கதை ஆகிவிட்டது.

சமீபத்தில், கேரள போலீசார் இப்படி ஆடிப்பாடி வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்த நிலையில், தமிழக போலீசார் இப்படி நனடமாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

“கொரோனோ..” என துவங்கும் பாடலைப் பாடியபடி ஆண் – பெண் போலீசார் கும்மி அடித்து ஆடுகிறார்கள்.

இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதாவது:

“இது போன்ற வீடியோக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இந்த கொரோனா பீதி காலத்தில், வீட்டிற்குள் இருந்து பணி புரிய முடியாமல், களத்தில் நிற்கும் துறையினரில் காவல் துறையினரும் உண்டு. அவர்களது பணி மகத்தானது.

இப்படி களத்தில் இறங்கி பணியாற்றும்மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளர் கள், ஊடகத்தினர் உள்ளிட்டோரை மக்கள் பாராட்டுகின்றனர்.

இந்நிலையில், போலீசாரை ஆடவிட்டு,
“கொரோனா” பாடலை வெளியிட்டது, அவர்கள் மீதான மரியாதையை குலைக்கவைப்பதாக உள்ளது.

விழிப்புணர்வு என்பது மரியாதைக்குரியதாகவும் இருக்கவேண்டும். கேலிக்கூத்தாக ஆகிவிடக்கூடாது” என தெரிவிக்கின்றனர்.