144 ஊரடங்கு உத்தரவு ஏன்?எதற்கு? என்ன சொல்கிறது..!
குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி 144 வது பிரிவின் கீழ் ஓரிடத்தில் சட்டவிரோதமாக கூடுவதற்க்கு தடை விதித்து உத்தரவு பிறபிக்கப்படுவது ஆகும். மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் தனது நிறுவாக பகுதியிற்கு உட்பட்ட எங்கு வேண்டுமானாலும் இந்த தடை உத்தரவை பிறப்பிக்க முடியும்.
இந்த உத்தரவு கலவரங்களை தடுக்கவும்,பொது அமைதியை பாதுகாப்பதற்கும் இந்தத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த சட்டதின்படி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடுவது சட்டப்படி குற்றமாகும். அந்த கூட்டத்தினரால் ஏதேனும் பொது அமைதிக்கு பாதகம் ஏற்பட்டால் கூட்டத்தில் இருந்த அனைவருக்குமே தண்டனைகிடைக்கும்.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
144 வது பிரிவு நோக்கம் என்ன?
- பயமுறுத்தல்
- மனித வாழ்க்கைக்கு பங்கம்
- பொது அமைதிக்கு இடையூறு
தேர்தல் நேரத்தில் ஏதேனும் இடையூர் ஏற்படாமல் இருக்க இந்தச் சட்டம் பொருந்தும்.
சட்ட விரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதங்கள் அல்லது மரணத்தை விளைவிக்கத்தக்க ஆயுதங்களுடன் செல்வோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை. அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
அபாயகரமான இயற்கை பேரிடர் சமயத்தில் இந்தச் சட்டம் மக்களை பாதுகாப்பதற்கு பொருந்தும்.
144 தடை உத்தரவு இருக்கும் வரை காவல்துறையினர் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்கள் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும். என்பது விதிமுறை. இந்த விதிமுறைகள் வன்முறைக் காலகட்டங்களில் நிலைமைகளைக் சமாளிக்கவும், சீரமைக்கவும் மிக உதவியாக இருக்கும். ஊரடங்கு உத்தரவு காலகட்டங்களில் முன்னதாக போலீஸ் அனுமதியின்றி மக்கள் நடமாடவோ, வீட்டை விட்டு வெளிவரவோ தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
போக்குவரத்து, கூட்டங்கள் நடத்துவது முற்றிலும் தடைவிதிக்கப்படும் மற்றும் கடைகள்,பள்ளிகள்,பொதுச்சந்தை,மருத்துவமனைத்தவிர அனைத்தும் மூடப்பட வேண்டும்.
ஊரடங்கு உத்தரவு எப்போது நடைமுறைப்படுத்தப் படுகிறது;
இன, சாதிக் கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, இயற்கை பேரிடர், சுகாதார சீர்கேடு,தேர்தலின் போது முன் எச்சரிக்கை பாதுகாப்புக்காக இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப் படுகிறது.
குறிப்பிட்ட பகுதி,நகரங்களில் இந்த தடை உத்தரவு பிரப்பிக்கப்படும்.
144 என்ன செய்ய வேண்டும்;
144 தடை உத்தரவு இருக்கும் போது உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் துறையிடம் தனது துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும். காவல் துறை அனுமதியின்றி மக்கள் நடமாடவே, வீட்டை விட்டு வெளியேரவோ கூடாது.
மீறினால் தண்டனை என்ன?
தடையை மீறினால் 188- பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்படும்.
கலவரம் ஏற்படுத்தி சுகாதார சீர்கேடு, அமைதியை கெடுத்தல், இதற்கு காரணமானவர்கள் 6மாதம் சிறைதண்டனை, ஆயிரம் ரூபாய் அபதாரம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
பொதுவாக இந்த சட்டம் கலவரங்களை தடுக்கவும்,பொது அமைதியை பராமரிக்கவும் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்படுவது வழக்கம்.
சில சமயங்களில் இயற்கை பேரிடர் காலங்களில் உயிர் சேதம் ஏற்படாமல் மக்களை பாதுகாப்பதற்கு இந்த சட்டம் உதவும்.