என் மனதை பாதித்த மரணம் நடிகர்  ரஜினி உருக்கம்..!

 இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக திரைத்துறையில் நுழைந்த விசு, இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர்  பல துறைகளில் வித்தகராக திகழ்ந்தவர்.

இவர் 1941-ம் ஆண்டு பிறந்தார். இவர் திரைத்துறையை விட்டு  வெளிவந்தாலும் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என தனது கடைசி மூச்சியுள்ளவரை பணியாற்றி வந்தவர்.

இவர் நடித்த குடும்பக் கதைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய படங்கள் பல  தமிழில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் குடும்ப மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

ரஜினியின் மன்னன், உழைப்பாளி ஆகிய  படங்களில் நடித்திருக்கும் இவர் நெற்றிக்கண் படத்தின் கதாசிரியர் ஆவார்.

அந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.  இந்தப் படத்தை தனுஷ் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல் வெளியான போது அதற்கு எதிப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் விசு.

அவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்னையால்  சிகிச்சை பெற்று வந்தர். இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு  திரைத்துறையினர் பலர் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினியின் இறங்கல்;

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது.

அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related Posts