எஸ்.பி.பி.மறைவு; கொரோனா உனக்கு காது இல்லையா? இயக்குநர் சீனு ராமசாமி உருக்கம்
சென்னை; கொரோனா தொற்று காரணமாக திரைப்பட பாடகர் எஸ்.பி.பால சுப்ர்பிரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74 இந்திய திரைப்பட பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட்14-ம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எஸ்.பி.பி உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக கூறியிருந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளாதாக தெரிவித்தனர். தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் பாடும் நிலா உயிர் பிரிந்தது.
பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கொரோனா நீயும் உயிரினந்தானே ?
உனக்கு செவிகள் இல்லையா?
இதயம் இல்லையா?
உயிர்கொள்ளி மிருகமே
எழுதிப் பிழைப்பவன் சொல்கிறேன்
நீ அழிந்து போவாய்..
இசை மூச்சே #SPBalasubramaniam ஐயா இதயஅஞ்சலி என பகிர்ந்துள்ளார்.
எஸ்.பி.பி. மறைவுக்கு திரைதுறையினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இறங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-யாழினி சோமு