லண்டன் பின்னணியில் விமல் – ஸ்ரேயா காம்போ! திரையில் வெடிக்கப் போகும் ‘சண்டக்காரி’ காமெடி கலாட்டா!

லண்டன் பின்னணியில் விமல் – ஸ்ரேயா காம்போ! திரையில் வெடிக்கப் போகும் ‘சண்டக்காரி’ காமெடி கலாட்டா!

‘த்ரிஷ்யம்’ ஜீத்து ஜோசப்பின் மிரட்டலான கதையில், பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள செம கலகலப்பான ரோம்-காம் (Rom-Com) திரைப்படம் ‘சண்டக்காரி’! ‘புன்னகை பூ’ கீதா தயாரிப்பில், சினிமா உலகின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளை அதிரவைக்க வருகிறது.

லண்டனில் காதலும்… மோதலும்… லூட்டியும்!

லண்டனில் உள்ள ஒரு டாப் சாப்ட்வேர் கம்பெனிதான் கதைக் களம்! ‘சிவாஜி’ பட புகழ் அழகு தேவதை ஸ்ரேயா அந்த கம்பெனியின் கண்டிப்பான பாஸாக களம் இறங்க, அதே ஆபீஸில் வேலை பார்க்கும் ஜாலி சாப்ட்வேர் எம்ப்ளாயியாக நம்ம விமல் கலக்கியிருக்கிறார்.நேர் எதிர் துருவங்களான அதிகாரி ஸ்ரேயாவுக்கும், ஊழியர் விமலுக்கும் இடையே நடக்கும் ஈகோ ஃபைட், காதல் மோதல்கள், எதிர்பாராத ட்விஸ்ட்டுகள் என படம் முழுக்க ஒரே ரகளைதான்! இருவருக்குள்ளும் வெடிக்கும் இந்த ‘சண்டை’தான் படத்தின் அல்டிமேட் சுவாரஸ்யம்!

விமல் – ஸ்ரேயா இடையே சிக்கும் சத்யன்!

இந்த ரெண்டு பேரோட லவ்-ஹேட் ஃபைட்டுக்கு நடுவுல மாட்டிட்டு முழிக்கும் கேரக்டரில் சத்யன் செம காமெடி செய்திருக்கிறார். ஒவ்வொரு சீன்லயும் இவங்க ரெண்டு பேர்கிட்டயும் சிக்கி அவர் படும் பாடு, திரையரங்குகளில் ரசிகர்களைச் சிரிக்க வைத்து வயிற்றைப் புண்ணாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

நட்சத்திரப் பட்டாளமும் தியேட்டர் திருவிழாவும்!

இவர்களுடன் பிரபு குணச்சித்திர வேடத்தில் அசத்த, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கெத்து காட்டியிருக்கிறார்கள். கிரேன் மனோகர், ‘கடலோர கவிதைகள்’ ரேகா, ‘மகதீரா’ வில்லன் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் எனப் பெரிய நட்சத்திரக் கூட்டமே படத்தில் இணைந்துள்ளது!

அம்ரீஷின் துள்ளலான இசை, குருதேவின் அட்டகாசமான ஒளிப்பதிவு, தினேஷ் பொன்ராஜின் ஷார்ப் எடிட்டிங், கனல் கண்ணனின் மாஸ் ஃபைட்ஸ் என படம் டெக்னிக்கலாகவும் தெறிக்கவிட்டுள்ளது.

காதலில் தொடங்கி, சண்டையில் சிக்கி, காமெடியில் கலக்கும் இந்த ‘சண்டக்காரி’, குடும்பத்தோடு தியேட்டரில் வந்து ரசித்துச் சிரிக்க ஒரு செம கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

Related Posts