சனாதனமும் தமிழ்நாட்டு மக்களும்!: டி.வி. சோமு

சனாதனமும் தமிழ்நாட்டு மக்களும்!: டி.வி. சோமு

‘சனாதனம் – இந்து மதம்’ என்ற விவாதம் தொடர்கிறது; இது நல்லதே.

அதே நேரம், பெரும்பாலான தமிழர்கள் இவை குறித்து அலட்டிக்கொள்வதே இல்லை.

இதற்கு ஓர் உதாரணம்.

சனாதனத்தின் உச்சமாக விளங்கிய காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி, பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இன்று(ம்) சனாதனத்துக்கு கொடிபிடிக்கும் அவர்கள்தான் (முதன் முறயாக!) சாலைக்கு வந்து ஒரு போராட்டம்கூட நடத்தினார்கள். மற்ற ஹிந்துக்கள், மறுநாள் தீபாவளியை வழக்கம்போல் கோலாகலமாக கொண்டாடினர்.
அந்த ஜெயேந்திரர் மறைந்தபோதும் வருந்தவும் இல்லை, மகிழவும் இல்லை.

அதே நேரம், காஞ்சி சங்கர மடத்துக்கு சில சொத்துக்களை எழுதி வைக்கும் அளவுக்கு பக்தராக இருந்தார் பாடகர் எஸ்பிபி. ஆனால் அவர் மறைந்தபோது, அழுது தீர்த்தார்கள், தமிழர்கள்.

‘உன் விருப்பம் நீ மடத்துக்கு கொடுக்கிறே.. அது எங்களுக்கு ஆகாது! ஆனா உன் குரலுக்கு நாங்க ரசிகர்கள்’ என்பதே தமிழ்நாட்டில் சுமார் 87% இந்துக்களில் பெரும்பான்மையானவர்களின் எண்ணம்.

ஆகவே இங்கே, ‘பாத்துட்டான்.. பாத்துட்டான்’ என்பது போல சனாதனிகள் கூக்குரலிட்டு மக்களை ஏமாற்றுவது சுலபமல்ல.

Related Posts