“தமிழ் சினிமா என் வீடு, இன்னும் நிறைய நடிக்கணும்!” – ‘எங்கள் தங்கம்’ பிரஸ் மீட்டில் சமந்தா ஓப்பன் டாக்!

“தமிழ் சினிமா என் வீடு, இன்னும் நிறைய நடிக்கணும்!” – ‘எங்கள் தங்கம்’ பிரஸ் மீட்டில் சமந்தா ஓப்பன் டாக்!

சமந்தா நடிப்பில், “This GOLD is BLOODY BOLD” அப்படிங்கிற மரண மாஸ் டேக் லைனோட உருவாகியிருக்கிற படம் தான் ‘எங்கள் தங்கம்’. ஜூன் 19 அன்னைக்கு தியேட்டர்கள்ல ரிலீஸாகப்போற இந்த படத்தோட பிரஸ் மீட் சமீபத்துல சென்னையில சத்யம் தியேட்டர் ஏரியாவுல செம்ம கிராண்டா நடந்துச்சு. ராஜ் நிடிமொரு உருவாக்கத்துல, பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிற இந்த படத்தை சமந்தாவும் சேர்ந்து தயாரிச்சிருக்காங்க.

விழாவுல கேமராமேன் ஓம் பிரகாஷ் பேசும்போது, “நந்தினி ரெட்டினாலே லவ், ஃபேமிலி சப்ஜெக்ட்னு நினைப்போம். ஆனா இந்த தடவை சமந்தாவை வச்சு ஒரு ஹார்ட்கோர் ஆக்‌ஷன் உலகத்தையே காட்டியிருக்காங்க. சமந்தாவோட அர்ப்பணிப்பு சும்மா மிரட்டல்” அப்படின்னு பில்டப் கொடுத்தாரு.

அடுத்ததா பேசின சீனியர் ஆக்ட்ரஸ் கௌதமி, “சமீபகாலமா நான் அதிக படங்கள் பண்றதில்ல. ஆனா சமந்தா, நந்தினி ரெட்டி ரெண்டு பேரோட டேலண்ட், உழைப்பை பார்த்துதான் இந்த படத்துல நடிக்க ஒத்துக்கிட்டேன். இது ‘உமன் பவர்’ இல்ல பாஸ், பக்கா ‘டேலண்ட் பவர்’. படம் கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்” அப்படின்னு வாழ்த்தி பேசினாங்க.

கடைசியா மைக் பிடிச்ச நம்ம சமந்தா எமோஷனலா பேசினாங்க: “சென்னைக்கு வர்றது எனக்கு எப்பவுமே சொந்த வீட்டுக்கு வர்ற மாதிரிதான். காலேஜ் படிக்கும்போது இந்த சத்யம் தியேட்டர் ஏரியாவுல தான் சுத்தியிருக்கேன். தமிழ்ல நான் இன்னும் நிறைய படங்கள் நடிச்சிருக்கணும்ங்கிற வருத்தம் எனக்கு எப்பவுமே உண்டு. ஆனா, இனிமே நல்ல கதைகள் வந்தா கண்டிப்பா தொடர்ந்து தமிழ்ல நடிப்பேன். இத்தனை வருஷமா நான் தமிழ்ல அதிக படம் பண்ணலைனாலும் என் மேல அன்பு காட்டுற ரசிகர்களுக்கு பெரிய நன்றி.

இந்த படத்துல நான் நடிச்சது மட்டுமில்லாம தயாரிப்பாளராவும் இருக்கேன். ஒரு படத்தை ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு இப்போதான் புரியுது. சந்தோஷ் நாராயணனோட மியூசிக், ஓம் பிரகாஷோட கேமரா, லீ விட்டேக்கரோட இன்டர்நேஷனல் ஆக்‌ஷன்னு படம் வேற லெவல்ல வந்திருக்கு. தமிழ் சினிமா என் வீடு, அந்த வீட்டுக்கு பெருமை சேர்க்கிற மாதிரி இந்த ‘எங்கள் தங்கம்’ இருக்கும்” அப்படின்னு செம்ம கான்ஃபிடென்ட்டா பேசியிருக்காங்க சாப்!

Related Posts