குறைகிறதா உச்ச நடிகர்களின் சம்பளம்?

கொரோனா பாதிப்பு உலகமுழுவதும் அச்சுரித்து வருகிறது. இந்த சமயத்தில் சினிமாவின் முன்னணி நடிகர்களின்  சம்பளத்தை குறைக்க வேண்டியது கட்டாயம் என பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலக பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துவருகிறது.

பல நாடுகள்  மக்களை இழந்து, பொருளாதாரத்தையும் இழந்து வருகிறது. இன்னும் வைரஸுக்கு மருந்து கூட கண்டுபிடிக்க முடியாமல் ஊரடங்கு கடைப்பிடித்து வருகின்றன.   மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர். இந்த பாதிப்பால் அவர்களின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

ஊரடங்கள் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளும் தனது வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள்.  சூட்டிங் முடிந்தும் பல படங்கள் திரையிடப்படாமல் தேதியின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உச்ச நடிகர்களுக்காக சினிமாவில் முதலீடு செய்யப்பட்ட  பலகோடி ரூபாய் தேங்கிக்கிடக்கின்றன. ஊரடங்கு முடிந்த பிறகும் திரையிட்டாலும் பொருளாதார ரீதியில் வெற்றி பெறமுடியுமா?  என தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இந்த நோய் தொற்றின் ஊரடங்கால் சினிமா தொழில் கடும் நஷ்டத்தைச் சந்திக்ப் போகிறது. ஆகவே உச்ச நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

சினிமாத்துறை இதிலிருந்து மீளவேண்டும் என்றால் உச்ச நடிகர்கள், டெக்னீஷியன்கள் தங்களது சம்பளத்தின் 50% குறைக்க வேண்டும் என கேரளாவின் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் கூறியிருந்தார்.  இவரைத் தொடர்ந்து, தெலுங்கு நடிகர் ராணாவின் தந்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவும் அதே கருத்தைக் கூறியிருக்கிறார்.

கொரோனா தொற்றால் உலக நாடுகள் பொருளாதாரத்தில் சிரமத்தை சந்தித்து வருகிறது. இது சினிமாவில் இழப்புகளை தவிர்க்க முடியாது. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்திருக்கிறது.

அதையே சினிமாவிலும் பெரிய நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என கூறியுள்ளார்.