சிக்கியது ’கிருஷ்ணகிரி’ கொரோனா அடுத்த கட்ட நகர்வு…!
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிறது. தமிழகத்தில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ள நகரமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் மூன்று வண்ணங்களாக கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. தமிழகத்திலேயே பசுமை மண்டலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தற்போது அதையும் அச்சுருத்த வந்துவிட்டது கொரோனா.
கொரோனா தொற்று இல்லாத கிருஷ்ணகிரி, தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட இரண்டு பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே புட்டபர்த்தியிலிருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ஆனால் அந்தப் பெரியவரை சேலம் சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அவர் சேலத்தில் தடுக்கப்பட்டு சிகிச்சைக்கு அணுப்பியதால் அவர் கிருஷ்ணகிரி மாவவட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து பசுமை மண்டலத்தின் வாய்ப்பைப் பெற்றது.
அந்த மாவட்ட ஆட்சியர் பிரபகரன் வரும் 6தேதி ஊரடங்கில் தளர்வு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கிருஷ்ணகிரி உட்பட்ட சூளகிரி பகுதியைச் சேர்ந்த 52 வயது மற்றும் 60 வயதுள்ள இரண்டு பெண்களுக்கு இன்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை அந்த மாவட்ட நிர்வாகம் அறிவிதிருக்கிறது. இரண்டு பெண்களும் சமீபத்தில் இவர்கள் பெங்களூர் சென்று வந்ததாகவும் இவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த இரண்டு பெண்களும்,அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இதன் காரணமாக பசுமை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது.