குழந்தைகளைக் குறிவைக்கும் கொரோனா..!
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிறது. இன்று பிறந்து 3 நாட்களான குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிறந்து பத்து மற்றும் இரண்டு மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 527 பேர் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 266 பேர் சென்னையில் மட்டும் உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இன்று கடலூரில் பிறந்த குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதைத் தொடந்து 10 நாட்கள் ஆன ஆண் குழந்தை இரண்டும், இரண்டு மாத பெண்குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது சுகாதாரத் துறை.
சென்னையில் ஒரே நாளில் மூன்று குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்திருக்கிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக கடலூரில் இன்று 122 பேருக்கும் மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை உட்பட நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இயல்பாகவே பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆகவே அவர்களுக்கு நோய் தொற்று ஏபடுவது குறைவு. இந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று, தாய்ப்பால் வழியாக பரவியிருக்கலாம், அல்லது வேறு யாருக்காவது இருந்து அவர்கள் குழந்தையை தூக்கும் போது மூச்சு காற்று, உடலின் வியர்வை, உமிழ்நீர், வழியாகவும் பரவிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எப்படிப் பரவியிருந்தாலும் இந்த கொரோனா தொற்று அச்சத்தை ஏற்படுத்துகிறது.