ட்விட்டரில் ட்ரெண்டாகும் பூனம் பஜ்வா கேள்வி? பதில்…!
கொரோனா காலத்தில் பொதுமக்கள், வி.ஐ.பி.,நடிகர்,நடிகைகள் தனது பொழுது போக்கு காலத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இயக்குநர் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா.
அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான தெனாவட்டு திரைப்படத்தில் நடித்து தனக்கு என்று தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த லாக்டவுனில் நடிகை பூனம் பஜ்வா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருக்க ஒரு கேள்வி பதில் செஷனை நடத்தினார்.
ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். அவர்கள் கேட்ட கேள்விக்கு கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான் என பளீச் என்று பதில் அளித்தார்.
அதில், பலரும் பலவிதமான கேள்விகளை கேட்டனர். எதற்கும் அசராத பூனம் தனக்கு தெரிந்த பதில்களைக் கூறினார். விரவில் அவர் அடுத்த படத்தில் நடிக்க விருப்பதாகவும் கூறியிருக்கிறார்.