பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ 2 லட்சம்…! பிரபல நடிகையின் தாராள மனசு..!
கொரோனா பாதிப்பு என்பது உலக நாடுகளை கலக்கம் அடையச் செய்துவருகிறது. உலகமுழுவதும் பாதிப்புக்கு ஆழாகிவருகின்றனர். பொருளாதார நீதியாக மிகப் பெரியப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிறு தொழில், பெரும் தொழிற்சாலை, போக்குவரத்து, தனிமனிதன் பொருளாதாரம் என அனைத்தையும் முடக்கி வைத்துள்ளது இந்த கொரோனா.
இது திரை துறையினரையும் விட்டுவைக்கவில்லை. ஊரடங்கு உத்தரவால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தனித்து இருந்து வருகின்றோம். இந்த சூழ்நிலையில் படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கனகான தொழிலாளர்கள் பிழைப்பு நடத்திவருகின்றனர்.
ஊரங்கு காரணமாக படபிடிப்பு இல்லாததால் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அந்த துறைச்சார்ந சினிமா பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், தாயாரிப்பாளர்கள் உதவிவருகின்றனர். அந்த வகையில் அவர்களைத் தொடர்ந்து இன்னோரு பிரபல நடிகை உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
மேலும் கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார்.
மூம்பையில் தான் வசிக்கும் பகுதியில் அருகளிலுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். மேலும் பீட்டாவுடன் இணைந்து விலங்குகளை தத்தெடுத்தும் உணவளித்தும் உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.