ஓடவும் முடியாது..ஒளியவும் முடியாது..! இளைஞகளை மீண்டும் தெறிக்க விட்ட ட்ரோன்..!
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருப்பது பாதுகாப்பனது என்று அரசும்,திரைப்பிரபலங்கள், தன்னார்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதை சற்றும் பொருட்படுத்தாமல் விபரிதம் அரியாமல் சிலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இவர்களை கண்காணிக்கப்பதற்கு போலீஸ் ட்ரோன் கேமரா உதவி வருகிறது.
தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை இதன் மூலம் பாதுகாப்பு கருதி விரட்டி அடிக்கிறது.
ஏற்கனவே இதுபோல் ஒரு சம்பவம் இரண்டு நாள்களுக்கு முன் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இப்போது சேலம் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் கூட்டாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இதை தடுக்கும் விதமாக ட்ரோன் கேமரா இவர்களை விரட்டி அடிக்கிறது.