முதியோர்”, கர்ப்பிணி”  பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் முதலமைச்சர் வேண்டுகோள்!

சென்னை; தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அனைத்து வழிகளிலும் மக்களுக்கு  புரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்க முழு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள்  இதனைப் புரிந்து கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவும்.

உங்கள் வீட்டில் குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயம் இது.  தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே  இருக்கிறது.  வைரஸ் தொற்றை தடுக்க ஒரே வழி  நாம் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்வதே. கொரோனா ஒரு கொடிய தொற்று நோய் என்பதால் மக்கள்  புரிந்து கொண்டு முழுஒத்துழைப்பு கொடுப்பது அவசியம்.

உங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல்  போன்ற அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாடு அறையை உடனடியாக  தொடர்பு கொள்ள வேண்டும்.  மக்கள்  கூட்டமாக இருப்பதை தவிப்பது நல்லது அவசியம்.

கொரோனாவிற்கு சென்னை, மற்றும் கோவையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  

இந்த 144 தடை உத்தரவு மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கே ஆகும் எனவே நிலமையைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.