விஜய் பிறந்தநாள் திரைப்பிரபலங்களின் வித்தியாசமான வாழ்த்து..!
சென்னை: கொரோனா தொற்று அதிகம் பரவிவருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் விஜய் பிறந்த நாளான இன்று ரசிகர்கள் வெளியில் சென்று கொண்டாட முடியாத சூழ்நிலை.
சமூக வலைதளத்தில் விதவிதமான ஹேஷ்டேக்குகள், வீடியோ க்ளிப்பிங்ஸ் விஜய் படங்கள், பாடல் என தெறிக்கவிட்டுவருகின்றனர் ரசிகர்கள். திரைப்பிரபலங்களும் அமைதியான முறையில் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வாழ்த்துச் சொல்லிவருகின்றனர்.
நடிகர் விஜய் தனது 46வது பிறந்த நாளை இன்று கொண்டாடிவருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகரகள் பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாட திட்டம் போட்டுவைத்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக தனது பிறந்த நாள் கொண்டாட்டதிற்கு தடை விதித்தார் விஜய்.
நடிகர் விஜய்க்கு பிரபல நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ்;
முன்னனி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் வாழ்த்துச் சொல்லியுள்ளார். மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற ’குட்டி ஸ்டோரி’ பாடலை வயலினில் வாசித்து நடிகர் விஜய்க்கு வித்தியாசமான முறையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, ஆல்வேஸ் பி ஹேப்பி.. பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார் என்றும் உங்கள் பிறந்த நாளில் உங்களுக்கு ஒரு சிறு மரியாதை என குறிப்பிட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
நடிகர் சதிஷ்;
இவரைத் தொடர்ந்து நடிகர் சதீஷ், வீணையை கையில் வைத்தப்படி இருக்கும் போட்டோவை பதிவு செய்து [ALL I KNOW] எனக்கும் எல்லாம் தெரியும். என ட்விட் கொடுத்துள்ளார். மேலும் இவர் விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகிவருவது குறிப்பிடதக்கது.
நடிகை மஞ்சிமா மோகன்;
நடிகர் விஜய்க்கு நடிகை மஞ்சிமா மோகன் லவ்டு இட் என தனது ட்விட்டரில் தொரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா;
என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக உலகமே, கொண்டாடப்படும் “விஜய்க்கு” இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என ட்விட் செய்துள்ளார்.