ஆன்லையன்  வகுப்பு…குழந்தைகளின் கண்களுக்கு ஆபத்தா?

கொரோனா காலத்தில் பள்ளி, கல்லுரி, என அனைத்தும் திறக்கப்படாமல் இருக்கிறது. தொற்று அதிகரித்து வருவதால்’ திறப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பொதுவாழ்க்கை முடக்கம், வீட்டிலிருந்து வேலை, என வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளோம் நாம் அனைவரும். 

டி வி, போன், லேப்டாப் என அடங்கியிருக்கிறோம்.  மடியில் கணினி, காதில் ஹெட்போன், இயந்திர வாழ்க்கை. இன்று வீட்டில் வேலை, கல்வி என நமது இயல்பான வாழ்க்கையை முற்றிலும்  மாற்றியுள்ளது கொரோனா.

நமது வாழ்வில்  தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது மொபைல் போன்,லேப்டாப். உள்ளங்கையில் உலகம்.  எந்தளவுக்கு நாம் டெக்னாலேஜ் வளர்ந்துள்ளதோ அதை விட பல வித பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்பதே உண்மை. லேப்டாப், மொபைலால் ஏற்படும் கண்பாதிப்பு, மற்றும் தவிர்க்கும் முறைகளைப் பார்போம்.

கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதால் ஆன்லையன் வகுப்பு  தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கண்களுக்கு என்ன ஆபத்து ஏற்படும்?

மொபைல் போன் திரையைத் தொடர்ந்து பார்ப்பதால் கண் பாதிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (சி.வி.எஸ்.,) எனும் நோய்  தாக்கும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஒருவர் சராசரியாக தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் மொபைல் போன் பார்கிறார் என்றால் அவருக்கு [சி.வி.எஸ்.சின்] கண்கள் வறண்டு போதல் நோய் ஏற்படும் என்று ஆய்வுகூறுகிறது.

நமது கண்களை ஒரு நிமிடத்துக்கு 16-20 முறை சாதாரணமாக இருக்குபோது சிமிட்டுவோம். அதுவே மொபைல் போன்,கணினியைப் பார்க்கும் போது 6-8 முறைதான் சிமிட்டுகிறோம் என்று ஆய்வுதெரிவிக்கிறது.

கண் மற்றும் தலைவலி;

 நாம் தொடர்ந்து கழுத்தை சாய்த்து குனிந்து, அல்லது அசைவுகள் இல்லாமல் நேராக திரைகளை பார்ப்பதால் தலைவலி, கழுத்து வலி, கண் உலர்வு ஏற்படும்.

மேலும் பார்வை மங்குதல்: தொடர்ந்து திரைகளை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பார்வை மங்கலாகும் வாய்ப்பு அதிகமாகும். ஒரு சிலருக்கு  அதுவே நிரந்தரமாகும் என எச்சரிக்கிறது ஆய்வு.

பாதிப்பு என்ன;

மொபைல் போன், கணினித் திரையினால், கிட்டப் பார்வை,கண் வறட்சி நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதற்கு தீர்வு என்றால்  கண்ணாடி அணிதல், கான்டாக்ட் லென்ஸ் பொருத்துதல், லேசர் அறுவை சிகிச்சை போன்றவை இதற்கு சிகிச்சையாகும்.

அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் வருடத்தில் சுமார் 7 லட்சம் பேர் லேசர் கண் அறுவை சிகிச்சை செய்துகொள்வதாக தகவல். மற்றும் 2கோடிக்கும் அதிகமானொர் கான்டாக்ட் லென்சை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலமை நமது குழந்தைகளுக்கும் வரவேண்டுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

 ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால்  குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை கண் மருத்துவமனை முதல் வருக்கு உயர்நீதி மன்றம்  கேள்வி எழுபியுள்ளது.  பாதிப்பு ஏற்படுவது உறுதியானால் ஆன்லையன் வகுப்புக்கு தடைபோடப்படும்.

இருந்தும் இந்த சூழ்நிலையில் தவிக்க முடியாவிட்டாலும் பாதுகாக்கலாம்.

பாதுகாப்பது எப்படி;

 போன், கணினியைப் பார்க்கும் போது அடிக்கடி கண் சிமிட்டுங்கள் அவ்வாறு செய்வதால் கண்ணில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் கண்கள் பாதுகாக்கப்படும்.

தொடர்ந்து  காதுகளுக்கு மொபைல்,மற்றும் கணினி சவுண்ட்  காதிரைச்சல் நோய்யை ஏற்படுத்தும். நம் காதில் ஹெட்போன் வைக்காத நேரத்தில் கூட முணுமுணப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். தொடர்ந்து சத்தம் நீண்ட நேரம் கேட்பதால் காதிரைச்சல் நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் சரிசெய்வது கடினம்.
தவிப்பது எப்படி;

சத்தமாக ஒலியைக் கேட்கக் கூடாது.  வேலைப்பளுவால் உண்டாகும் சோர்வு, மன அழுத்தம் போக்க  எளிய உடற்பயிற்சி அவசியம்.

முன்பெல்லாம் 40 50 வயதில் வரும் பிரச்னைகள் எல்லாம் இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு 15 வயதிலே ஏற்படுகிறது.  கழுத்துவலி, கண் பார்வைத்திறன் குறைபாடு, காது பிரச்சனை என நீள்கிறது. இதற்கு  நமது வாழ்க்கையில் ஒன்றாகிப்போன கம்யூட்டர், மொபைல் போன்களே காரணம்.

அதிகமாக தண்ணீர் குடியுங்கள், கழுத்தை அவ்வப்போது திருப்பி அசைத்து பாருங்கள் ஒரே நிலையில் இருப்பதை தவிக்கவும். திரையிலிருது தள்ளியிருங்கள், கண்களை அடிக்கடி மூடித்திறங்கள்  அவசியம் என்றால் மட்டுமே போன், கணினியைப் பார்க்க அனுமதியுங்கள்.  நம் குழந்தைகளின்  கண்களைப் பாதுகாப்போம்.

எஸ். யாழினி