”கொரோனா” சென்னையை மீட்பது எப்படி? வரலாற்றுப் பதிவு..!
சென்னை; கொரோனா தொற்று தமிகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது குறிப்பாக சென்னையில். தடுப்பதற்க்கு வழிதெரியாமல் விழிபிதிங்கிக் கொண்டுள்ளது அரசு. சென்னையைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்கள் கடிமையான ஊரடங்கு. வெளியில் யாரு சுற்றினாலும் வாகனப் பறிமுதல்,வழக்குப் பதிவு’’ என என்னசெய்தும் பலன் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த சூழ்நிலையில் மூத்த பத்திரிகையாளர் டி.வி.சோமு அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் சென்னையில் கொரோனா தடுப்பதற்கான வழி என்ன? என்பதை கடந்த கால வரலாற்றை சுட்டிக் காட்டி பதிவு செய்துள்ளார்.
தமிதமிழகத்தில் வீட்டுக்கு ஒருவர் – ஒருகுடும்பம் சென்னையில் இருக்கிறது. தலைநகர் என்பதால் அரசு துறை நிறுவனங்கள், தொழில்கள், துறைமுகம், விமான நிலையம், ரயில்களின் மாறுதல்கள்.. இப்படி பல்வேறு காரணங்கள்.
ஆகவேதான் தமிழக மக்கள் தொகை சுமார் ஏழு கோடி என்றால், சென்னை பகுதியில் சுமார் ஒன்றரை கோடி பேர் வசிக்கிறார்கள்.
இங்கு மக்கள் – இட நெருக்கடியைப் போக்க, திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்; இது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.
திருச்சி அண்ணாநகர் நவல்பட்டில், தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியை அமைக்க தீவிர முயற்சி எடுத்தார், எம்.ஜி.ஆர்.
திருச்சி வந்தால் அவர் தங்குவதற்கு, உறையூர் கோணக்கரையில் ஒரு பெரிய வீடும் கட்டப்பட்டது.
அந்த நேரத்தில்தான் அவரது உடல் நிலை பாதிப்பு, பிரதமர் இந்திரா காந்தி மரணம், தேர்தல்… என பல நடந்தன.
திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்கும் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.
ஒரே இடத்தில் மக்கள் குவியாமல் இருக்க, முதல் கட்டமாக, நிர்வாக ரீதியாக மக்களுக்கு பயனுள்ள வகையில், திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவித்து, செயல்படுத்தினால் நல்லது.
சென்னை வடகிழக்கு மூலையில் இருப்பதால் வெகு தூரத்தில் இருந்து மக்கள் வந்து செல்லும் பிரச்சினையும் தீரும்.
தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் என்று படிப்படியாக திட்டமிட்டு சென்னையின் மக்கள் பரவலை குறைக்கலாம்.
இது நீண்டகாலமாக சொல்லி மறக்கப்பட்ட திட்டம்.
“சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால், கொரோனா எளிதில் பரவ வாய்ப்பாகிறது!” என்று சொல்லப்பட்டதால், மீண்டும் நினைவுக்ககு வந்தது.
டி.வி.எஸ்.சோமு முகநூல் பதிவு.