காலை9 மணிமுதல் 2 மணிவரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கோரிக்கை!
சென்னை: பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் முதலமைசருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோல் விநியோகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்திய முழுவதும் 144 தடை உத்தரவு பிரபித்துள்ளது. இந்த நிலையில் சிலர் தேவையின்றி இரண்டு சக்கர வாகனங்களில் சாலையில், தெருவில் சுற்றுவது என விபரீதம் அறியாமல் பொழுது போக்காக சுற்றிவருகின்றனர். காவல் துறையும் கண்டித்தும் அடித்தும் திருந்தச் சொல்லி அறிவுரைகள் கூறி அனுப்பி வைக்கின்றனர்.
எனினும் வெளியில் வாகனத்தில் சுற்றுவது அதிகமாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலை இப்படியிருக்க பெட்ரோல் விற்னையில் சில கட்டுப்பாடுகள் விதித்து மக்கள் வெளியில் சுற்றுவதை தடுக்க தமிழக அரசு நடவெடிக்கை எடுக்கவேண்டும் என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது. தமிழ்நாடு பெட்ரோல் விநியோகர் சங்கம் பெட்ரோல் விற்பனை காலை 9 மணி முதல் 2 மணி வரை மட்டுமே விற்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் அரசு வரையறுத்த அவசர ஊர்திகள், பால், காய்றிகள், மற்றும் அவசர தேவைகள், மற்றும் அரசின் வாகங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்ய நாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.