குளிக்கப் போன இடத்தில் போலீஸ் நூதன தண்டனை!
இந்திய முழுவது ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஏதே அரசாங்க விடுமுறை என விபரீதம் புரியாமல் கூட்டமாக திரிகின்றனர். நேற்று மாலை நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சில இளைஞர்கள் கூட்டமாக ஆற்றில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். மற்றும் இதைப் பார்த்த வேறு சில நபர்களும் அலச்சியத்துடன் ஆற்றங்கரையில் கூடி அரைட்டை அடித்துள்ளனர். இந்த தகவல் சுத்தமல்லி காவல் துணை ஆய்வாளர் திரு. சக்தி நடராஜன் அவர்களுக்கு சென்றது அவரது தலைமையில் காவல்துறையினர் அந்த இளைஞர்களைப் பிடித்து நூதன முறையில் தண்டனை கொடுத்தனர்.
பிறகு கொரோனா குறித்த விபரீத்தை விளக்கமாகச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஏலே கொஞ்சமாவது திருந்துகலே’’