’’கொரோனா’’ டாக்கீஷ் உறவுகளை மேம்படுத்துங்கள் இயக்குநர் ராசி அழகப்பன்!
கொரோனா பரவாமல் இருக்க அரசு உரடங்கு உத்தரவு போட்டுள்ள நிலையில் இயக்குநர் ராசிஅழகப்பன் இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று கூறியுள்ளார்.
இன்று பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
பிள்ளைகளுக்காக ஓடி ஓடி சம்பாதிக்கும் நாம்
பிள்ளைகளோடு பேசுவதும், அவர்களுடன் விளையாடுவதும் , அவர்களோடு நேரம் ஒதுக்கு அவர்கள் பேசுவதை க்கேட்பதும் ஒரு வித செல்வமே.
கரோனா வைரஸ் வெல்ல வீட்டில் தனித்திருப்பதே நலம்.
அதையே பிள்ளைகள் உறவினர்களோடு இந்த 21 நாட்களை பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ள கொள்வோம்.
பணம் முக்கியம் தான்,அதைவிட முக்கியம் பிள்ளைகள் உறவுகள்.கணவன் மனைவி உறவை மேம்படுத்துங்கள
படிப்பவர் படியுங்கள், எழுதுபவர் எழுதுங்கள் ஓவியம் வரைபவர் வரையுங்கள் மனைவிக்கு உதவுங்கள்
உற்சாக மாக்கிக் கொள்ளுங்கள்,உறவுகள் மேம்படும் நாட்களாகட்டும்.இந்த எண்ணங்களை சொன்னதுதான்
காலம் கடக்க கவனமாய் இருப்போம்
அன்பை வெல்வது அன்பு மட்டுமே
அன்புடன்
திரைப்பட இயக்குனர் , எழுத்தாளர்.
ராசி அழகப்பன்