சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதியான இன்று ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது.
ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
தியேட்டர்கள் காலை முதலே திருவிழாக்கோலம் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேட்டையன் திரைப்படம் காலை 9 மணிக்கு முதல் காட்சியாக தொடங்குகிறது. அமெரிக்கா, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி போடப்பட்டுள்ளது. நள்ளிரவே ரசிகர்கள் குவிந்து டிஜே மியூசிக் வைத்து அதகளம் செய்துள்ளனர்.
வேட்டையன் படத்தின் டீசர், டிரெய்லர் எல்லாம் ஓவர் ஹைப் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் மாஸ் என கொண்டாடுகின்றனர்.
பாசிட்டிவ் விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் அளித்து வருகின்றனர்.
படத்தின் முதல் பாதி வேறலேவல் வெறித்தனம். பக்கா பிளாக்பஸ்டர் லோடிங்
மாஸ் இல்லை.. மாஸ்ல தான் கன்டென்டே என்றும் முதல் 25 நிமிடங்கள் தலைவரோட காட்சிகள் அனைத்துமே கூஸ்பம்ப்ஸ் மொமண்ட் தான்.
அனிருத்தின் பிஜிஎம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
படம் பக்காவான கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
வேட்டையன் படத்தின் இடைவேளை காட்சி பயங்கர ரேஸியாகவும் சிறந்த புலனாய்வு படமாகவும் அமைந்துள்ளது.
ரஜினிகாந்தை தாண்டி இந்த படம் இயக்குநர் படமாக மாறியிருக்கிறது.
அமெரிக்காவில் அதிகாலையிலேயே குழந்தைகள் பெண்கள் என ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வேட்டையன் படத்தை காண குவிந்துள்ளனர். உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் உள்ள நிலையில், ஓவர்சீஸில் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.