‘வேட்டையன்’ ரூ.240 கோடி வசூல்: லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு

‘வேட்டையன்’ ரூ.240 கோடி வசூல்:  லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் உலக அளவில் ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து  உள்ளது.

போலீஸ் என்கவுன்டருக்கு எதிராகவும், நீட் தேர்வு, கோச்சிங் சென்டர்களின் அராஜகத்தையும் கேள்வி எழுப்பியிருக்கிறது ரஜினியின் ‘வேட்டையன்’. படத்தின் கன்டென்ட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

கடந்த அக்.10-ம் தேதி வெளியான ‘வேட்டையன்’ 2 நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்தது. மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி என கூறப்படுகிறது. ர

தற்போது இப்படம் 4 நாட்களில் ரூ.240 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கூலி’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் புதன்கிழமை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.