இராவண கோட்டம் இயக்குநர், விக்ரம் சுகுமாரனுக்கு சிறந்த இயக்குநர் விருது!

இராவண கோட்டம் இயக்குநர், விக்ரம் சுகுமாரனுக்கு சிறந்த இயக்குநர் விருது!

சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, இராவண கோட்டம் படம். இவரக்கு, கிழக்கு ஐரோப்பிய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருது அளிக்கப்பட்டு உள்ளது.பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக, பணிபுரிந்த விக்ரம் சுகுமாரன்,  வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் கொடிவீரன் படத்திலும் நடித்தார். மதுரையைக் களமாக கொண்ட ஆடுகளம் படத்திற்கு சிறப்பாக உரையாடல் எழுதினார்.

மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  அவரது முதல் படமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சமீபத்தில்  இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கினார். கண்ணன் ரவி தயாரிப்பில், சாந்தனு நாயகனாக நடித்தார்.படத்தில், சாதி கலவரங்களின் பின்னணியில் இருக்கும் ஆதாய அரசியலையும் அதன் சூட்சுமம் அறியாமல், ஈசலாக அதில் விழும் அப்பாவி மனிதர்களின் அறியா இயல்பையும் சிறப்பாக சொல்லி இருந்தார், இயக்குநர் விக்ரம் சுகுமாரன். மேலும், கருவேல மர ஒழிப்பின் பின்னணியில் இருக்கும் அரசியல் சிக்கல்களையும் பேசியிருந்தார்.

இந்நிலையில்தான், ரோனியா நாட்டில் நடைபெற்ற ‘கிழக்கு ஐரோப்பிய திரைப்பட விழாவில்’ இராவண கோட்டம் திரைப்படத்துக்காக  அவருக்கு ‘சிறந்த இயக்குநர்’ விருது கிடைத்துள்ளது.

இது தமிழ்த் திரையுலகுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கே பெருமையாகும்.