பிப்.15 : புதிய தலைமுறை சக்தி விருது 2025 விழா!

பிப்.15 : புதிய தலைமுறை சக்தி விருது 2025 விழா!

புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக வருடம்தோறும் வழங்கப்படும் சக்தி விருதுகள் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி  சென்னையில் நடைபெறுகிறது.

பிரபல தொலைக்காட்சியான, புதிய தலைமுறை சார்பில் சாதனைப் பெண்களுக்கு வருடந்தோரும் சக்தி விருது வழங்கப்படுகிது.

தலைமை, திறமை, துணிவு, புலமை, கருணை மற்றும் வாழ்நாள் சாதனை என்ற ஆறு தலைப்புகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கான பரிந்துரைகள் நடுவர் குழுவினரால் ஆய்ந்து அதிலிருந்து சிறந்தவர்கள்  தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு, தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி,   தீயணைப்புத்துறை அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் ஐ.ஏ.எஸ், இஸ்ரோ விஞ்ஞானி ஷாஜி,  இயற்கை விவசாயி பாப்பம்மாள்,  மூன்றாம் பாலினத்தவர்களுக்காக குரல்கொடுத்து வரும் பிரியா பாபு,  உலக சுகாதார நிறுவனத்தின் மேனாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த (2025ம்) ஆண்டுக்கான விழா,  வரும் பிப்ரவரி மாதம் 15, ஆம் நாள் சனிக்கிழமை மாலை சென்னை டிரேட் சென்டரில் நடக்க இருக்கிறது.

புதிய தலைமுறை சார்பில், “இந்த நிகழ்ச்சி வழக்கம் போல் மார்ச் 8ம் தேதி பெண்கள் தினத்தன்று பு.த. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்” என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

Related Posts