தினசரி: விமர்சனம்

தினசரி: விமர்சனம்

சிந்தியா புரடக்சன்ஸ் சார்பில் சிந்தியா லூர்டே என்ற அமெரிக்கத் தமிழ் வம்சாவளிப் பெண் தயாரித்து ஆக்கத் தலைமை செய்து கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.  ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்க, மீரா கிருஷ்ணன், வினோதினி, எம் எஸ் பாஸ்கர், பிரேம்ஜி , சாம்ஸ் , சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி இருக்கின்றனர். , கவுரவத் தோற்றத்தில் ராதாரவியும் வருகிறார்.

இளையராஜா பாடல்கள் எழுதி இசை அமைக்க சங்கர் எழுதி இயக்கி இருக்கிறார்.

விமர்சனத்துக்குள் செல்வோம்..

ஓய்வு பெற்ற தமிழாசிரியர் எம் எஸ் பாஸ்கர். அவரது  காதல் மனைவி  மீரா கிருஷ்ணன். இவர்களது மகளாக வினோதினி, மகனாக ஸ்ரீகாந்த்.

தனக்கு வரும் மனைவி தன்னை விட அதிக சம்பளம் வாங்கும் வேலையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஸ்ரீகாந்த்.  இதனாலேயே  அவருக்குப் பெண் அமையாமல் திருமணம் தள்ளிப்போகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் பிறந்து தமிழ்க் கலாச்சாரம் கற்று குடும்பத் தலைவியாக மட்டும் இருக்க நினைக்கும் சிந்தியா லூர்டேவை, சில பொய்களை சொல்லி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர் அவனது குடும்பத்தினர்.

முதலிரவிலேயே  இருவருக்கும் பிரச்சினை ஆரம்பமாகிறது… பிறகு  ஒவ்வொரு உண்மையும் அவனுக்குத் தெரிய வர பிரச்சினை வெடிக்கிறது.

ஆனால் நாயகனின் அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் அவனது மனைவி பக்கம் நிற்க , நாயகனுக்கு அனைவர் மீதும் ஆத்திரம்.

அதற்கிடையே, நாயகன், பல இடங்களில் கடன் வாங்கி அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அந்தப் பணத்தை சிட்ஃபண்டில் போட அந்தப் பணம் ஏமாற்றப்பட, அதோடு அவருக்கு வேலையும் போக, கடன்காரர்கள் விரட்ட…

அதன் பிறகுநடந்தது என்ன என்பதே தினசரி.

நாயகன் ஸ்ரீகாந்த்துக்கு வழக்கம் போல் வழக்கம்போல சாஃப்டான கேரக்டராக இல்லாமல்,  கொஞ்சம் அதிரடியான கதாபாத்திரம்தான்.  பணத்தாசை… அதற்கு தடையாக நிற்கும் குடும்பத்தினடரிம் டென்சன் ஆவது என சிறப்பாகவே நடித்து இருக்கிறார்.நாயகி சிந்தியா லூர்டே அருமையான நடிப்பை அளித்து இருக்கிறார். திருமணமானதும் கணவனிடம் காட்டும் பாசம்… அவன் விலகி நிற்க வெளிப்படுத்தும் சோகம் என சிறப்பாக நடித்து உள்ளார்.

அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் இருவருமே வழக்கம் போல அருமையான நடிப்பை அளித்து இருக்கிறார்கள். குறிப்பாக தங்களது காதல் நாட்களை அசைபோடும் காட்சியில் நெகிழ வைத்து விடுகிறார்கள்.

இந்த கான்செப்டைவைத்து இவர்களை நாயகன் நாயகி ஆக்கி ஒரு படம் எடுக்கலாம். அத்தனை அருமை.

வினோதினியும் வழக்கம்போல் அருமையான நடிப்பு. குறிப்பாக.. . அழும் தம்பியை எல்லோரும் அழுது சமாதானப்படுத்த இவர் மட்டும் செல்லமாக அடித்து சமாதானப்படுத்தும் காட்சி… அசத்தல்.

படத்தின் பலம் வசனங்கள், குறிப்பாக முதல்  இன்னும் சிறப்பு.  பின்னணி இசையில் ஈர்க்கிறார் இளையராஜா .

‘அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதே .. பணத்தை விட உறவுகளும் மன நிம்மதியும் அவசியம்’ என்கிற விசயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்காகவே படத்தைப் பார்க்கலாம்.

தயாரிப்பாளராகவும் களம் இறங்கி இருக்கும் நாயகி சிந்தியா லூர்டேவுக்கு ஒரு ஆலோசனை: அழகாக இருக்கிறீர்கள்.. ஆனால் உங்கள் முகபாவத்துக்கு அதிரடி கதாபாத்திரங்களில் நடித்தால் கவனிக்கப்படுவீர்கள்.

Related Posts