‘பேர் சொல்லும் பிள்ளை’ : பிரின்ஸ் பிக்சர்ஸ் – கவின் கூட்டணியில் புதிய படம்!

‘பேர் சொல்லும் பிள்ளை’ : பிரின்ஸ் பிக்சர்ஸ் – கவின் கூட்டணியில் புதிய படம்!

கவின் ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட்! பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், கவின் நடிப்பில் உருவாகும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் தொடங்கிவிட்டது.

‘தண்டட்டி’ படத்தாலே மிரள வைத்த இயக்குநர் ராம் சங்கையா, இந்த முறை கவினை வைத்து ஒரு கிராமிய களத்தில் அதிரடி காட்ட வருகிறார். நாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கமிட்டாகியிருக்க, ஆர். வேல்ராஜ் கேமராவை கையாள, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் தொடக்க விழாவிற்கு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். அவர் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைக்க, ஒட்டுமொத்த டீமும் உற்சாகத்தில் இருக்கிறது.

நல்ல கதையம்சம், தரமான தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒட்டுமொத்த குழுவும் களத்தில் இறங்கியிருப்பதால், படம் தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை. அடுத்தக்கட்ட அப்டேட்களுக்காக ஆவலோடு வெயிட் பண்ணுவோம்!

Related Posts