இந்திய அளவில் பெருமை…சிவில் சரிவீஸ் சாதித்த நடிகரின் மகன்!
ஒரு நடிகரின் மகன் நடிகராகவோ அல்லது தொழிலதிபராகவோ, ஊர்சுற்றி வீனாப்போன ஒரு மகனகவே பெரும்பாலும் இருக்கின்றனர். ஆனால் இதற்கு விதிவிலக்காக பிரபல நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் பெருமை சேர்த்துள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் பல கலந்து கொண்டனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பொறுப்புகளுக்கு 829 தேர்ச்சி பெற்றியிருக்கின்றனர்.
பிரதீப் சிங் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதுகுறித்து ஆவர் கூறும்போது ஸ்ருதன் ஜெய் தான் என்னவாக விரும்புகிறேன் என்பதை தேர்வு செய்து படிக்க, பெற்றோர் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும், தமிழகத்தின் வலிமைகளான கல்வி, சுற்று சூழல், தொழில்வளம் போன்றவற்றில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார். இவரை பிரபலங்கள் முதல் பலரும் பாராட்டிவருகின்றனர்.
இனியன்