‘அஜித் சார் மூலம் கிடைச்ச வாய்ப்பு!’: ‘குட் பேட் அக்லி’ சக்ஸஸ் அர்ஜூன்தாஸ்!

‘அஜித் சார் மூலம் கிடைச்ச வாய்ப்பு!’: ‘குட் பேட் அக்லி’  சக்ஸஸ் அர்ஜூன்தாஸ்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் – த்ரிஷா ஜோடியாக நடித்து வெளியானத் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. அர்ஜூன் தாஸ் முக்கிய வில்லனாக  இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.  மேலும்,சுனில்,, பிரசன்னா  உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

தினம் திரைப்படத்தின் வசூல் தமிழ்நாட்டில் 100 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவித்த படக்குழு,  ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெற்றி விழாவை நடத்தியது.

நிகழ்வில் அர்ஜூன் தாஸ் அர்ஜுன் தாஸ் விழாவில் நெகிழ்ச்சியாக பேசினார்.

அவர்,  “எங்க இருந்து ஆரம்பிக்கிறதுனு தெரில. இன்னைக்கு சுரேஷ் சந்திரா சார் டீம் நிக்குற இடத்துலதான் 11 வருஷத்துக்கு முன்னாடி நான் நின்னுட்டு இருப்பேன். இன்னைக்கு இந்த இடத்துல இருக்கேன். அஜித் சார் 2013-ல இருந்து என் மேல நம்பிக்கை வச்சிருக்கார். அவர்தான் இந்த படத்துக்காக என்னை ஆதிக்கிட்ட சொல்லியிருக்கார்.

ஜாமி கதாபாத்திரத்தை நல்லபடியாக கையாண்டதற்கு பிரியாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் அஜித் சாரோட எல்லா படத்தோட போஸ்டரையும் நான் ஷேர் பண்ணுவேன். அப்படி ஒரு நாள் சுரேஷ் சந்திரா சார் எனக்கு கால் பண்ணி, `ஆதிக் மீட் பண்ணனும்னு சொன்னாரு போய் பாருங்கனு’ சொன்னாங்க. அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது” என்றார் அர்ஜுன் தாஸ்.
 

 

 

Related Posts