“13 வருடங்கள் கழித்து அஜித் சாருடன்…!”: நெகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் – த்ரிஷா ஜோடியாக நடித்து வெளியானத் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. அர்ஜூன் தாஸ் முக்கிய வில்லனாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும்,சுனில்,, பிரசன்னா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
தினம் திரைப்படத்தின் வசூல் தமிழ்நாட்டில் 100 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவித்த படக்குழு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெற்றி விழாவை நடத்தியது.
நிகழ்வில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சியாக பேசினார்.
அவர், “18 வருடங்கள் கழித்து அஜித் சாருடைய படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜித் சாருக்கு நன்றி. இப்படி ஒரு பிளாக்பஸ்டர் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’, ‘மார்க் ஆண்டனி’ இப்போது ‘குட் பேட் அக்லி’ என ஆதிக்குடன் மூன்று ஹிட் படங்கள் கொடுத்திருப்பதில் சந்தோஷம். தயாரிப்பாளர்கள் ரவி சார், நவீன் சாருக்கும் நன்றி. தமிழில் மிகப்பெரிய படம் மூலம் எண்ட்ரி கொடுத்திருக்கிறீர்கள். என்னுடைய டீமுக்கும் நன்றி. டெக்னிக்கல் டீமும் அருமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தியா மட்டுமில்லாமல் ஸ்ரீலங்கா, மலேசியாவிலும் படம் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களுக்கும் நன்றி” என்றார்.