யோகி பாபுவின் ‘ஜோரா கைய தட்டுங்க’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

யோகி பாபுவின் ‘ஜோரா கைய தட்டுங்க’:  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

யோகிபாபு நடிக்கும் ஜோரா கைய தட்டுங்க திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி, சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் வெளியிட்டனர்.

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த யோகிபாபு,  ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து  வெளிவந்த அரண்மனை4, ரத்னம் போன்ற படங்களும் பெரும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். மேலும், ஹரிஸ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ‌‌ஶ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்குகிறார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரிக்கிறார்.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மது அம்படின் ஒளிப்பதிவில்,  எஸ்.என். அருணகிரியின் இசையில், தேசிய விருது பெற்ற திரு. சாபு ஜோசப்பின் எடிட்டிங்கில், ஜித்தன் ரோஷனின் பின்னணி இசை அமைக்கிறார்.

“படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் முடிவடைந்தன. படம் விரைவில் வெளியாகும்”  என படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதியும், சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் வெளியிட்டனர்.

போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Related Posts