விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் மோகன் நடிக்கும் ‘ஹரா’ டிரெய்லர் அதிரடி சாதனை!

விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் மோகன் நடிக்கும் ‘ஹரா’ டிரெய்லர் அதிரடி சாதனை!

விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில்  மோகன் நடித்துள்ள ஹரா படத்தின் டிரெய்லர், ஒரே நாளில் மூன்றரை லட்சம் பார்வையாளர்களைக் கடந்து, அதிரடி சாதனை படைத்துள்ளது.

‘மூடுபனி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள். பயணங்கள் முடிவதில்லை. கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா. 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில், 14 வருடங்களுக்குப் பிறகு , ஹரா படத்தின் மூலம் திரையுலகுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

‘தாதா 87’, ‘பவுடர்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி  இப்படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார். கோயம்புத்தூர் மோகன் ராஜ், ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.

இது, ஒரே நாளில் மூன்றரை லட்சம் பார்வையாளர்களைக் கடந்து, அதிரடி சாதனை படைத்து வருகிறது.

Related Posts