உள்ளாடை திருடிய கவிஞர்! அதிரவைக்கும் சி.சி. டிவி காட்சி!

உள்ளாடை திருடிய கவிஞர்! அதிரவைக்கும் சி.சி. டிவி காட்சி!

நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சமீபமாக, வீட்டுக்கு வெளியே காயப்போடும் துணிகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து திருடு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான காவலர்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை துவக்கினர். இதில், நெல்லை தச்சநல்லூர் பெருமாள் வடக்கு தெருவைச் சேர்ந்த தாணப்பன் (52) என்பவர் பல்வேறு இடங்களில் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

தாணப்பன், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் கவிதை மற்றும் கட்டுரை தொகுப்புகள் புத்தகங்களாக வெளியாகி உள்ளன.இவர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பெண்களின் உள்ளாடைகளை திருடிய கவிஞரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(தற்போது இவரது முகநூல் பக்கம் இயங்கவில்லை. கைது செய்யப்படும் முன், அதை டி ஆக்டிவேட் செய்து உள்ளார் என்று தோன்றுகிறது.)