கோ.ப.செ.: “மானுடத்தின் மகத்தான மேன்மை!”: கவிஞர் ஜெயபாஸ்கரன்
தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி உருவாக்கத்தில், ஏகன் அறிமுக நாயகனாக நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. அருளானந்து – மாத்யூ தயாரித்திருக்கும் இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
படம், வரும் 2ம் தேதி, வெள்ளிக்கிழமை, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பிரபலங்கள் பலர், நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
படம் குறித்து கவிஞர் ஜெயபாஸ்கரன் கூறியதாவது:
“மிகவும் அருமையான, மானுடத்தின் மகத்தான மேன்மைகளையும் பேரன்பையும் எடுத்துரைக்கின்ற திரைப்படம்.
இத்திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு, அக்கதையின் மாந்தர்களோடும் இயற்கையின் காட்சிகளோடும், சேர்ந்து வாழ்வதைப் போன்றதொரு உன்னத உணர்வு மேலிடுகிறது.
இத்திரைப்படம் வார்த்து வடிவமைக்கப் பட்டுள்ளவிதம், இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் படவுலகப் பட்டறிவையும், ‘மானுடப் பார்வை’ கொண்ட அவரது கலைக்கோட்பாட்டையும் பறை சாற்றுகிறது.
படம் வெற்றியடையும்.
இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு என் உள்ளம் நிறைந்த இனிய நல் வாழ்த்துகள்!” என்று கவிஞர் ஜெயபாஸ்கரன் தெரிவித்து உள்ளார்.