கோ.ப.செ: “கலையின் வழி மாற்றங்களைத் தரும் சீனு ராமசாமி!”: கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்!

கோ.ப.செ: “கலையின் வழி மாற்றங்களைத் தரும் சீனு ராமசாமி!”: கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்!

தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி உருவாக்கத்தில், ஏகன் அறிமுக நாயகனாக நடிக்கும்    ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. அருளானந்து  – மாத்யூ தயாரித்திருக்கும் இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ஐஸ்வர்யா தத்தா  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

படம், வரும் 2ம் தேதி,  வெள்ளிக்கிழமை, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பிரபலங்கள் பலர், நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
படம் குறித்து கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. தெரிவித்து உள்ளதாவது:” திருநம்பி- திருநங்கைகளின் இருப்பு வலி மிகுந்த துயரமல்ல, கொண்டாட்டத்திற்குரிய தன்னுணர்தல் எனும் உண்மையை உலகத்திற்கு உரக்கச் சொல்கின்றது இந்த அருமையான பாடல். சமூக உணர்வோடு யதார்த்தமான திரைப்படங்களைச் சமைக்கின்ற எனதருமை சீனு ராமசாமியின் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ எனும் திரைப்படத்தில் இடம் பெறுகிறது.

தமிழ்சினிமா இதற்கு முன்பாக நம் சகோதர – சகோதரர்களைக் கேலிக்குரியவர்களாகச் சித்தரித்து வெளியிட்ட பாடல்களுக்கும், காட்சிகளுக்கும் இதன் மூலமாகப் பிராயச்சித்தம் தேடியிருக்கிறது.

தன் கவிமனதை விட்டுத் தராமல் புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்களைப் பிரகடனப் படுத்தாமல் கலையின் வழி மாற்றங்களைத் தனித்துவமான திரைமொழியில் தருகின்ற ரசவாதி எனதன்பு இயக்குநர் சீனு ராமசாமிக்கு மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!” என, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. குறிப்பிட்டு உள்ளார்.

Related Posts