‘பாத்து போங்க!’: புலம் பெயர்ந்தோர் நல அமைப்பின் தமிழ்நாடு பிரிவு நடத்தும் விழிப்புணர்வு நடை!
இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயல்படும், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பின் (PoE), தமிழ்நாடு பிரிவு, நடத்தும் விழிப்புணர்வு நடை, நாளை ( பிப்.8) காலை 7.30 மணிக்கு சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறுகிறது.
வெளிநாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மோசடிகள் தொடர்ந்து நடக்கின்றன. சட்ட விரோதமாக செயல்படும் சில முகர்கள் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகிறாரகள். இவர்கள் மீது, மத்திய அரசின் புலம் பெயர்ந்தோர் நல அமைப்பு (PoE) நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் மோசடி பேர்வழிகளிடம் மக்கள் ஏமாந்துவிடாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாளை, சென்னை எலியட்ஸ் கடற்கறையில் விழிப்புணர்வு நடை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதில் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், பொது மக்கள் என அனைவரும் கலந்து கொள்ள அழைப்ப விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்பதற்கு, www.emigrate.gov.in/#/walkathon என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

