பியர் கிரில்ஸ்வுடன் ரஜினி பங்கேற்ற’ நிகழ்ச்சி மார்ச் 23’’இரவு8மணிக்கு டிஸ்கவரி அறிவிப்பு!
பியர் கிரில்ஸ் சாகச விரும்பியான இவர் டிஸ்கவரி செனலில் இவர் தொகுத்து வழங்கு நிகழ்ச்சிக்கு உலகெங்கும் மிகப் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மார்ச் 23 ஆம் தேதி இரவு 8மணி ஒளிபரப்பாகும் என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. இதற்கான முன்னோட்ட விடியோவையும் வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள், கர்நாடக மாநிலம், மைசூரில் இருக்கும் பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்றன. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து செயல்பட்டார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பான ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு வரும் மார்ச்மாதம் 23-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. இதற்கான முன்னோட்ட விடியோக்களை டிஸ்கவரி சேனல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.